Press "Enter" to skip to content

தமிழ் பெண் ஒருவரை நியமித்தார் ரணில்

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.

15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் கொழும்பு பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *