யாழ்.ஆரியகுளம் சமிக்ஞை விளக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் கணக்காளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் கடந்த 5/7/2022ம் திகதி ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கணக்காளராக பணியாறறிய எஸ்.கலைமதி என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதேவேளை குறித்த விபத்து சமிக்ஞை விளக்குகளை மீறி பட்டா வாகனத்தை செலுத்திய நபர்களால் நிகழ்ந்ததாகவும்,
வாகனத்தை செலுத்தியவர்கள் நிறை மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நோில் பார்த்த சிலர் கூறியிருந்தனர்.
Be First to Comment