சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது. எவ்வாறான போதிலும் போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் அதன் பின்பு இடம்பெற்ற நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இல்லை.
விசேடமாக போராட்டக்காரர்கள் என்ற போர்வையில், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றுக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரதான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை சிவில் அமைப்பு என்ற முறையில் நாம் அனுமதிக்கப்போவதில்லை. உண்மையில் அவை மக்களின் சொத்துக்களாகும். நாட்டின் புராதான சொத்துக்களாகும்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment