Press "Enter" to skip to content

ரணில் கோ ஹோம்’ என்று வலியுறுத்தி கொழும்பு காலிகமுத்திடலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

ரணில் கோ ஹோம் என்று வலியுறுத்தி கொழும்பு காலிகமுத்திடலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை கோட்டா கோ ஹோம் என்று வலியுறுத்தி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ரணில் கோ ஹோம் என்று கோரி வருகின்றனர்.

பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் குடும்பத்தின் பாதுகாவலனாகவே செயற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வருவதாற்காக நாம் போராடவில்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் வெளியேற்றுவதற்கு முன்பாக ரணில் தானாக பதவி விலக வேண்டும், கோட்டாவை வெளியேற்றியவாறு ரணிலையும் வெளியேற்றும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நோ டீல் கமவுக்கு முன்பாக இருவர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *