காலி முகத்திடல் போராட்ட களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18ஆம் திகதி) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாளை மறுநாள் (20ஆம் திகதி) இந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைப்பெறவுள்ள நிலையில், காலிமுகத்திடல் போராட்ட கள பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இதன் போது காலிமுகத்திடல் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு, தானோ, தனது கட்சியோ அல்லது தனது கூட்டணியோ ஒருபோதும் துரோகம் செய்யாது , அது எதிர்காலத்திலுமு நடக்காது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க கூடாது என காலிமுகத்திடல போராட்ட கள பிரதிநிகள் எதிர்கட்சி தலைவர்கள், உட்பட உறுப்பினர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர்.
அந்தவகையிலேயே நேற்றைய தினம் அனுரகுமார திஸாநாயக்கவையும் இன்றைய தினம் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Be First to Comment