Press "Enter" to skip to content

வாக்களிக்க வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ முகாமில் எரிபொருள்….

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வசதியாக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

தம்மால் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள இவ்வாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு குழுக்கள் எம்.பி.க்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதால், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு காரணமாக பாராளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர் அடங்கிய குழுக்களும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *