இன்று (19) மாலை 4 மணி நிலவரப்படி 2 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்காக பதிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment