மக்கள் போராட்டத்தின் பிரஜைகள்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் போராட்டக்குழுவினர் இந்த கட்சி பதிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்
இதேவேளை, கொழும்பு – காலிமுகத்திடலுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில்இன்று முற்பகல் இடம்பெற்றது.
போராட்டக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் பேராட்டக்குழுவினர் இன்று பிற்பகல் எதிரணியின் ஏனைய பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதற்கிடையில், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அந்த குழுவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான விமுக்தி துஷாந்த இதனைத் தெரிவித்தூர்.
உரிய வேலைத்திட்டங்களை முன்வைக்காது வேட்பாளர்கள் களமிறங்குவதை ஏற்க முடியாது.
அத்துடன் வீழ்ச்சியைடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் என்னவென வேட்பாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
அரசியல், பொருளாதார சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து
உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்குழுவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான விமுக்தி துஷாந்த தெரிவித்துள்ளார்.
Be First to Comment