செல்வம் அடைக்கலநாதனின் கைத்தொலைபேசியை ஜேவிபி இன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ரகசியமாக எட்டிப்பார்த்தமை தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே இந்த சம்பவம் நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அமர்ந்திருக்கையில் , கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் அவரது கைத்தொலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
இதன்போது அவரது பின்னால் அமர்ந்திருந்த ஜேவிபி இன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இங்கிதமின்றி செல்வம் அடைக்கலநாதனின் தொலைபேசியை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தார்.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவின் செயல் தொடபில் கடும் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் அவரது பிரத்யேக தொலைபேசியை உபயோகித்துக்கொண்டிருக்கையில் , அதனை ஜேவிபி இன் தலைவர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தமை அநாகரிகமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Be First to Comment