Press "Enter" to skip to content

தற்போது நாளாந்தம் 30-40 கொவிட் நோயாளர்கள் அடையாளம் -வைத்தியர் சமித் கினிகே

நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவுகள் எச்சரித்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் இருந்து தற்போது நாளாந்தம் சுமார் 30-40 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தலைமை தொற்றுநோய் நிபுணரான வைத்தியர் சமித் கினிகே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் நாளாந்தம் நேர்மறை நோயாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 பேர் வரை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தடுப்பூசிகள் காரணமாக கொரோனா வைரஸிலிருந்து எழும் சிக்கல்கள் மிகக் குறைவாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *