பிரதமரின் செயலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் இதனால் IMF கடன்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான பல கடிதங்கள், உட்பட பல ஆவணற்கள் காணாமல் போயுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக கடமையாற்றிய போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பிரதமரின் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. எனினும் போராட்டகாரர்கள் பிரதமரின் செயலகத்தை கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாக செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் இலங்கைக்கு தேவையான நிதியுதவிகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான தகவல்கள் அந்த ஆவணங்களில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆவணங்கள் காணாமல் போயுள்ளமையினால் சர்வதேச நாணயத்திடம் கடன் பெறுவதில் சிக்கல் நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகின்றது
Be First to Comment