பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி தீ வைத்து சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படும், முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் புதல்வர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியையும் அந்த அரசியல்வாதியின் புதல்வர் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைத்தது போன்று ரணில் விக்ரமசிங்கவின் வீட்டையும் சுற்றி வளைப்போம் அதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, இடம்பெற்ற சம்பவங்கள் காணொளி வடிவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Be First to Comment