எமது கோரிக்கைகளுக்கு டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இணங்கியதாக கூறுவது தவறானது என்றும் இது டலஸ் அழகப்பெருமவின் வெற்றி வாய்ப்புகளை சேதப்படுத்தும் நோக்கம் கொண்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த
கோரிக்கைகளுக்கு டலஸ் மற்றும் சஜித் இருவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே ஜனாதிபதி தேர்தலில் டலஸிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.” என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
Be First to Comment