Press "Enter" to skip to content

ரணில், சஜித், டக்ளஸ் உட்பட 50 பேர் இதுவரை வாக்களிப்பு!

நாடாளுமன்றில் இடம்பெறும் ஜனாதிபதி ரெிவுக்கான வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெரும உட்பட 50 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றில் ஆரம்பமானது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முதலில் வாக்களித்தார்.

நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சபாநாயகர், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் ஒழுக்கத்துடன் செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *