எரிபொருள் நிரப்புவதற்கு வாகன இலக்கத் தகடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பல நாட்களாக எரிபொருள் வரிசையில் இருப்பவர்களுக்கு இன்று சலுகை வழங்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனத்தின் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தேசிய எரிபொருள் செயல்முறை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளைக் குறைக்கும் என நம்புவதாகவும், எவ்வாறாயினும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய போது, சிலர் நான்கைந்து நாட்களாக வரிசையில் நிற்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன ஓட்டிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
வரிசையில் நின்றவர்களிடம் வினவியபோது, எரிபொருள் நிரப்பாமல் வெளியேற முடியாது எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது வரிசையில் நிற்பவர்களின் அவல நிலையை கருத்திற் கொண்டு இன்றைய தினம் மாத்திரம் சலுகை வழங்கப்படும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் இலக்கத்தகடு முறையின் அடிப்படையில் எரிபொருளை வலன்கள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் தரகுகட்டணம் தன்னிச்சையாக குறைக்கப்பட்டுள்ளது.
15 முதல் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட தரகுகட்டண விகிதங்கள் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி எதிர்காலத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





Be First to Comment