யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை பெறுவதற்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை. என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.
மாவட்டத்தில் வாகன இலக்கத்தின் அடிப்படையில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையில் சில கிராம சேவையாளர்கள் வாகன உரிம மாற்றம் பெறாதவர்களுக்கு பங்கீட்டு அட்டையை விநியோகிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் மேலதிக அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு உரிமை மாற்றம் அவசியமானதாக கருதப்படவில்லை.
குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர் எரிபொருள் அட்டையை வழங்கும்போது தனது பிரிவில் உரிமை மாற்றம் பெறாதவர்களிடம் தற்காலிக உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று அவர்களுக்கு எரிபொருள் அட்டையை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Be First to Comment