உரகஸ்மன்ஹந்திய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அஹுங்கல்ல பகுதியை சேர்ந்த 81 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பொத்துவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினமும் (22) எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்
Be First to Comment