இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க முடியும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை தடுக்க முடியும் என தேரர் மேலும் தெரிவித்தார்.
சில தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்தார்.
போர்த்துகீசியம் மற்றும் ஆங்கிலேய பாணியிலான அரசியற் கொள்கையைப் பின்பற்றிய கடைசி அரசியல்வாதி ஜனாதிபதி விக்கிரமசிங்க என்றும் அவருக்குப் பின்னர் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்
Be First to Comment