ஜனாதிபதி தெரிவின்போது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா பொஜன பெரமுனவின் எம்.பிக்கள் குழு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் தனி குழுவாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் குழுவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 16 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டலஸ் அழகப்பெருமவின் தலைமைத்துவத்தின் கீழ் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் சரித்த ஹேரன், பேராசிதியர் சன்ன ஜயசுமுன, கலாநிதி நாலக்க கொடஹேவா உள்ளிட்ட எம்.பிக்களும் அதேபோன்று மொட்டுக்காட்சியில் மனசாட்சிக்கு அமைவாக செயற்பட்ட சில எம்.பிக்களும் இந்தக் குழுவில அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழு எதிர்காலத்தில் புதிய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






Be First to Comment