நாடாளுமன்றத்தை நாளை மறுதினம் (25) கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (22) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விவாதம் நடத்துமாறு பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பான கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.
Be First to Comment