Press "Enter" to skip to content

யாழில் விற்பனைக்கு வந்து குவியும் புதுச் சைக்கிள்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு மாறி வருகின்றனர்.

இதன் காரணமாக நாட்டில் உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளன.

 

யாழில் விற்பனைக்கு வந்து குவியும் புதுச் சைக்கிள்கள்! (Photos) | New Bicycles Arriving In Jaffna Fuel Shortage

தற்போது இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு சற்று குறைவடைந்த நிலையில், யாழில் புதுச் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்து குவிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ரூபா. 65,000 பெறுமதியான லுமாலா வகை சைக்கிள்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது.

 

யாழில் விற்பனைக்கு வந்து குவியும் புதுச் சைக்கிள்கள்! (Photos) | New Bicycles Arriving In Jaffna Fuel Shortage

இதேவேளை, விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக ஷோரூம்களில் இருந்த சைக்கிள்கள் இன்றைய தினம் அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன.

அந்தத் தேவையால், 10,000-15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சைக்கிள், இன்று 80,000-95,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *