Press "Enter" to skip to content

ரணிலை வாழ்த்திய புடின், வெளிப்படுத்திய ஆர்வம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை அவர், ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை, ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்து செய்தியின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா-இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை என்பதை வலியுறுத்தும் ரஷ்ய ஜனாதிபதி புடின், இலங்கை மற்றும் ரஷ்யாவின் மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் தாம் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *