தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் கடந்த மாதம், முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது.
இக்காலப்பகுதியில் 537 மில்லயன் அமெரிக்க டொலர் வருவாயாக கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக முன்னர் பின்னடைவை சந்திருந்த ஆடை உற்பத்தி தொழிற்துறை, தற்போது பழைய நிலைமைக்கு வருவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் இருந்து தைக்கப்பட்ட ஆடைகள் அமெரிக்காவுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இரண்டாவது பெரிய சந்தையாக ஐரோப்பிய நாடுகள் காணப்படுகின்றன.
Be First to Comment