2017ஆம் ஆண்டு தனது வீட்டுப் பணிப்பெண் பிரசவித்த பின்னர் சிசுவைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கிணற்றொன்றில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு பொலிஸாரின் நீண்ட விசாரணையின் பின்னர், சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய வைத்தியர் சம்பவத்தின் போது மட்டக்களப்பு பகுதியில் வாடகை வீடொன்றில் தனது மனைவியுடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைத்தியரின் வீட்டில் பணிபுரிந்த பெண் பிரசவித்த சிசுவை மூச்சுத் திணறடித்து கொன்றதாக இந்த வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
பணிப்பெண்ணின் குழந்தையை கொன்ற குற்றச்சாட்டு வைத்தியர் கைது
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment