Press "Enter" to skip to content

முன்னாள் ஜனாதிபதி தலைமறைவாகவில்லை, சட்டப்பூர்வமாக சிங்கப்பூரில் தங்கியிருக்கிறார் – பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டரீதியாக சிங்கப்பூரில் இருப்பதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் வியாக்கியானங்களை நம்பவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ பொது உரிமைகளின்படி தேவையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிங்கப்பூர் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளை தேவையான அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் திகதிகள் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, ​​எந்த திகதியும் தனக்கு தெரியாது என்றார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *