வடக்கு மாகாணத்திலுள்ள மதகுருமார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல சிரமத்தின் மத்தியில் எரிபொருள் பெற்று வருகின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய நடைமுறைகளின் கீழ் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருளினை மக்களுக்கு வழங்கி வந்திருந்தோம் என நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடான சூழ்நிலையில் வடக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மாற்றுத் திறனாளிகள் வைத்தியசாலை செல்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது ஆகையால் நாளைய தினம் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் சர்வ மத குருமார்களும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது அந்தவகையில் நாளைய தினம் சர்வ மதகுருமார்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தவுடன்.
நாளைய தினம் வருகைதரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சர்வமத குருமார்களின் வாகனங்களுக்கு கீழ்வரும் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுமென தெரிவித்தார்.
அந்தவகையில் மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாய்க்கும்
முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாய்க்கும் கார்களுக்கு 3500 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.





Be First to Comment