பிபில யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் 23 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் அதிகாரியுடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 இலட்சத்து 3, 600 ரூபாவை அந்தப் பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஆசிரியையின் கடன் அட்டையை பயன்படுத்தியும் பல சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தான் காதலிக்கும் நபர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு சென்துள்ளார்.
இதனையடுத்தே சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment