Press "Enter" to skip to content

கொவிட்-19 – மேலும் நால்வர் மரணம்: புதிதாக 154 பேர் அடையாளம்

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (26) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,548 ஆகும்.

இதேவேளை, இன்று மேலும் 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 665,248.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *