ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் ஜூலை 9 ஆம் திகதியன்று கைப்பற்றியிருந்தனர். அதன்பின்னர் அங்கு பல்வேறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதி கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் மேற்போர்வையாக விரித்து, அதன் மேல் படுத்திருந்தார்.
அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்றியிருந்தார். அதற்கு குரலும் கொடுத்திருந்தார்.
அதில் அவர், ” நான் ஜனாதிபதியின் கொடியை, கட்டிலில் விரித்து படுத்து இருக்கின்றேன். எனக்கு கீழேயே கொடி இருக்கின்றது. ஆகையால், அவர் வீட்டுக்குப் போகவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கொடியை எடுத்துக்கொண்டு போய், ஏரிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரை தேடியே பொலிஸார் வலைவிரித்துள்ளனர்





Be First to Comment