கோட்டா கோ கிராமத்திற்கு புத்தரின் போதனைகளை பாடுவதில் அர்த்தமில்லை, அவர்களை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கருத்து அல்ல, இது சனத் நிஷாந்தவின் தனிப்பட்ட கருத்து. திருமதி சிறிமாவோ ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 71 ஆண்டு கிளர்ச்சியை எதிர்கொண்டிருக்க முடியுமானால், 1988, 1989,கிளர்ச்சியை ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு பிரேமதாஸ எதிர்கொள்ளும் வல்லமை படைத்தவர் என்றால் தற்போது ஏன் இந்த பயங்கரவாதிகளை அடக்க முடியாது?எனக்கு புரிந்த வரையில் இந்த பயங்கரவாதிகளுக்கு புத்தரின் நற்பண்புகளை கூறுவதில் பயனில்லை. இவர்களை நடத்துவதற்கு ஒரு வழி இருக்கிறது, அவர்களை நடத்த வேண்டிய விதத்தில் நடத்தாததன் விளைவு தான் இன்று இந்த மோசமான நிலை.
குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு நான் சென்றபோது, அந்தக் கோட்டா கோ கமவில் தனித்தனி கூடாரங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சில சாவடிகள் கஞ்சா குடிக்கும் கூடாரங்கள்,சில ஐஸ் போதைப்பொருள் பாவிக்கும் கூடாரங்கள், ஹெரோயின் பாவிப்பவை என பல கூடாரங்கள் காணப்படுகின்றன. நீங்கள் இதை சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்க முடியும். அண்மையில் கோட்டா கோ கமவிற்கு சென்ற பொலிஸாரை இது எங்கள் ஊர் என்று மிரட்டினர். அந்த கிராமத்தில் சட்டமே இல்லையா? இந்த நாட்டில் பதினான்காயிரத்து இருபத்தி இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. கோட்டா கிராமம் என்ற கிராமத்தில் சட்டம் இல்லையா என கேள்வி எழுப்பிய சனத் நிஷாந்த போதைபொருள் பாவிப்பவர்களால் ஆட்சி மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. மீண்டும் ராஜபக்சக்கள் அதிகாரத்திற்கு வருவார்கள் என கூறினார்.
Be First to Comment