Press "Enter" to skip to content

தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞர்கள் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியுடன் மோதிய நிலையில், மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த கனரக வாகனத்தில் மோதிய நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணை

 

மட்டக்களப்பு – சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *