Press "Enter" to skip to content

பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்! அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் (Jeevan Thiyagaraja) சட்டத்துக்கு விரோதமான உத்தரவுகளை நிறைவேற்றாத காரணத்தால் வவுனியா நகர சபையின் செயலாளராகக் கடமையாற்றிய இ.தயாபரன் பழிவாங்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) எழுத்துமூலம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

 

பழிவாக்கும் செயலில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்! டக்ளஸிடம் முறைப்பாடு | Governor Jeevan Thiyagaraja Vindictive Action

உத்தியோகத்தர் இ.தயாபரனை இடமாற்றம் செய்கின்ற தீர்மானத்தை ஆளுநர் எடுத்தமையைத் தொடர்ந்து பிரதம செயலாளர் ஊடாக விசேட இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அறியக் கொடுத்துள்ளது.

அமைச்சருக்குச் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதனால் மேற்படி முறைப்பாடு எழுதிக் கையளிக்கப்பட்டுள்ளது.

 

பழிவாக்கும் செயலில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்! டக்ளஸிடம் முறைப்பாடு | Governor Jeevan Thiyagaraja Vindictive Action

ஆளுநரின் சட்டத்துக்கும், நியாயத்துக்கும் புறம்பான கட்டளைகளை நிறைவேற்றாத காரணத்தால் தயாபரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் பிரதம செயலாளரூடாக தயாபரனுக்கு மாத்திரம் விசேடமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *