பாடசாலை வேன்கள், பஸ்களுக்கு எரிபொருள் பெற இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
Digital News Team 2022-07-26T17:23:53
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மற்றும் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வாரத்தில் இரண்டு நாட்களை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதன்படி, பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும், அதேவேளையில் CPC மற்றும் SLTB ஆகியவை பாடசாலை வேன்கள் மற்றும் பஸ்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் அருகிலுள்ள டிப்போவிலிருந்து எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
மேலும், கல்வி அமைச்சு புதிய தனியார் பஸ் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது; ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு வசதியாக ஒகஸ்ட் 1 முதல் இந்த சேவை பாடசாலைகளின் பெயர் பலகையுடன் நாளாந்தம் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் தேவையான பஸ்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவொரு சிரமமும் இன்றி இந்த போக்குவரத்து சேவையில் செல்ல முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Be First to Comment