யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டை அடுத்து, பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment