அவசரகால சட்டதையும் இனப்படுகொலையையும் ஆரம்பித்து இன்றுடன் 39 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன.
ஜே ஆர் ஜெயவர்த்தனவே இந்த இரண்டு விடயங்களையும் ஆரம்பித்து வைத்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவர் ஆரம்பித்து வைத்த ஒடுக்குமுறையின் காரணமாகவே ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இதேவேளை 39 வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, ஜெகன் உட்பட்ட 53 பேருக்கு தமது அஞ்சலியை வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், கொல்லப்பட்ட அந்த 53 பேரின் உடலங்களையும் புதைத்த இடத்தை அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
Be First to Comment