Press "Enter" to skip to content

எரிபொருள் நிரப்பு நிலையை வாசலில் ஆடி அமாவாசை விரதத்தை முடித்த பொதுமகன்

எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமகன் ஒருவர் ஆடி அமாவாசை விரதத்தை எரிபொருள் நிலைய வாசலில் இருந்து முடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் ஓரளவுக்கு சீரான போதும் பெருமளவான மக்கள் இன்னும் எரிபொருளை பெற முடியாத நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

இந்நிலையில் தந்தையை இழந்தவர்கள் அனுட்டிக்கும் ஆடி அமாவாசை விரத நாளான இன்று தனது வீட்டிலிருந்து விரதத்தை அனுட்டிக்க முடியாத பொதுமகன் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலைய வாசலில் வாழை இலை போட்டு விரத உணவை உட்கொண்டுள்ளார்.

இந்த காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *