Press "Enter" to skip to content

ஒலுவிலில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

28 ஜூலை 2022

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடற்றொழிலாளர் பயன்பாட்டுக்கு ஆரம்பித்து வைத்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஒலுவில் மீன்பிடித் துறைமுகமானது 2007ஆம் ஆண்டு அப்போது துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்து மறைந்த மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பெரு முயற்யினால் அஅமையப்பெற்று .

மேற்படி துறைமுகம் ஆனது ஒரு பக்கம் வர்த்தக துறைமுகமாகவும் மறுபக்கம் மீன்பிடித் துறைமுகமாகவும் இரு பயன்பாடுகளைக் கொண்டதாக அமையப்பெற்றதாகும்.

இந்த துறைமுகமானது காலத்திற்கு காலம் ஏற்படும் கடலறிப்பு மற்றும் மணல் நிறைதல் போன்ற காலநிலை சவால்களை எதிர்கொண்ட போதும் அதை முறையாக பராமரிப்பதில் இருந்த குறைபாடுகள் காரணமாக துறைமுகப்பகுதியில் மணல் நிறைந்து துறைமுக வாயில் மூடப்பட்டதால் பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் கானப்பட்டது.

மேற்படி துறைமுகத்தை நம்பியிருந்த பலநாள் படகுத் தொழிலை செய்துவந்த கடற்றொழிலாளர்கள் காலநிலைக்கு ஏற்ப தமது படகுகளை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து பாதுகாக்கும் நிலையே இருந்து வந்தது. அதனால் பல்வேறு நடைமுறை சார்ந்த இடர்களை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில் ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் ஆழப்படுத்தியும் அங்கு கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் செய்து தந்து கடற்றொழிலை நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை பாதுகாத்துத் தருமாறும், இத்துறைமுகம் செயற்படுமானால் இதனுடாக நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அயராது எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக ஒலுவில் துறைமுகத்தின் வாயில் பகுதி தேவையான அளவு ஆழமாக்கப்பட்டு இன்றைய தினம் மீண்டும் கடற்றொழிலாளர் பாவனைக்கு கையளித்தது வைக்கப்பட்டது.

ஒலுவில் துறைமகத்தை பெருங்கனவோடு அமைத்த மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்திற்கு “அஷ்ரப் ஞாபகாரத்த ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்” என்று புதிய பெயர் சூட்டப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து பல படகுகளை ஒலுவில் துறைமகப்பகுதிலேயே தரித்து நிற்கச் செய்வதுடன் துறைமகப்பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கட்டித் தொழிற்சாலை மற்றும் ரின்மீன் தொழிற்சாலை என்பன மீளவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் படகு திருத்தப்பணிகளை மேற்கொள்ளவும், படகு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி இன்றைய நிகழ்வில் அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் ஒலுவில் பலநாள் மற்றும் ஒருநாள் படகு உரிமையாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *