Press "Enter" to skip to content

கோட்டாபயவை தடுத்த அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் – டயனா கமகே

டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால், சஜித் பிரேமதாச பிரதமரானால் அரசாங்கம் நன்றாக இருக்குமா? பரிதாபமாக இருக்குமல்லவா?” என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று (27) பாராமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற விடயங்களை குறிப்பிட விரும்புவதாக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் இராஜதந்திர உரிமைகள் இருந்தன , அவர் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது அவரது கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு அதிகாரிகள் உடனடியாக இனங்காணப்பட்டு உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய நடத்தைக்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம். அவர்கள் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர். கடமையை தவறியுள்ளனர் என்றும் அவர் இங்கு கூறினார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *