கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய போது கைது செய்யப்பட்ட போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ் அலி அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளி என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட ஒருவர், மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று விசா நிபந்தனைகளை மீறி ஓராண்டுக் காலம் தலைமறைவாகியிருந்த டனிஸ் அலி கைது செய்யப்பட்டு அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகி நாட்டிலுள்ள மற்றுமொரு நபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment