சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகைதந்திருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவுக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் சமூக ஊடகங்களில் நேரலை காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.
Be First to Comment