Press "Enter" to skip to content

சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் – பொதுமகன் இடையில் தகராறு! வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு..

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று எரிபொருளை பெற்றபோது இடையில் சில இளைஞர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் நின்ற பொலிஸாரின் உதவியுடன் எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் வரிசையில் நின்ற ஒருவர் எரிபொருள் நிலையக் கடமைக்கு பொறுப்பாக நின்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் இவ்வாறு வழங்குவது பிழை என கூறிய நிலையில் அங்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் நியாயம் கேட்டவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த பாதிக்கப்பட்ட நபர் குறித்த பொலிஸ் உத்தியோத்தர் மது போதையில் நின்றதாக குற்றஞ்சாட்டியதுடன்,

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *