முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களது 23வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் நடைபெற்றது.
மூளாய் பகுதியில் உள்ள, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது இல்லத்திலே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில், முன்னாள் யாழ். மாநகரசபை உறுப்பினர் தங்க முகுந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன் மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.
Be First to Comment