Press "Enter" to skip to content

ரயில் விபத்தில் சிக்கிய இரண்டு மலையக யுவதிகள்!

வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கிரேசியன் பிரிவு, உடபுஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் வேளையில் யுவதிகள் இருவரும் மோதுண்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதியும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *