Press "Enter" to skip to content

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த யுவதி பலி!

அனுராதபுரம், பந்துலகம, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, நேற்று (30) யுவதியொருவர் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து எரிபொருள் உள்ளதா என அறிந்து மீண்டும் அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது பின்னால் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று திடீரென முன்னோக்கி நகர்ந்து மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

தாயும் மகளும் கீழே விழுந்து டிப்பரின் முன் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தில் மகள் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை ஸ்டார்ட் செய்வதற்காக மற்றுமொரு டிப்பர் வாகனத்தினால் பின்னாலிருந்து தள்ளப்பட்ட நிலையில், டிப்பர் முன்னோக்கி சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *