யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமமத்திற்கு செல்லும் முருக பக்தர்களுக்கு குமண தேசிய வனத்தின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையான வழிப்பாதையை கடந்து செல்ல தேவையான வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர்.
கடற்படை தளபதியின் உத்தரவு
கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் உத்தரவின் பேரில் தென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அத்மிரல் பிரசாத் காரியபெருமவின் கண்காணிப்பின் கீழ் முருக பக்தர்களுக்கான வசதிகளை கடற்படையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உயிர் காப்பு சேவை உள்ளிட்ட வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர். பக்தர்கள் கும்புக்கன் ஓயா ஆற்றை கடந்து செல்ல ஆற்றுக்கு குறுக்காக இரண்டு கயிறுகளை கட்டி அவர்களை பாதுகாப்பாக கரையேர கடற்படையினர் உதவியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் இருந்து கதிர்காமமத்திற்கு யாத்திரை செல்லும் முருக பக்தர்கள்
கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக வடக்கு, கிழக்கில் இருந்து முருக பக்தர்கள் யாத்திரையாக கதிர்காமம் சென்று தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
Be First to Comment