Press "Enter" to skip to content

களனி பல்கலைக்கழக மாணவர் கடத்தப்பட்டு 3 மணிநேரம் விசாரணை

களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் வீதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் குழுத் தலைவரான 4ஆம் ஆண்டு மாணவர் என மாணவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இவர் கடத்தப்பட்டதாகவும், சுமார் 3 மணித்தியால விசாரணைகளின் பின்னர் வீதியில் விடப்பட்டதாகவும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *