தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (01) காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம்திகதி தேசிய தொலைக்காட்சிக்குள் பிரவேசித்து வன்முறையில் ஈடுபட்டமை, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தானிஸ் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.“
கட்டுநாயக்கவிலிருந்து டுபாய் புறப்படவிருந்த விமானத்தினுள் வைத்து, கடந்த 26 ஆம் திகதி குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யட்டார்.





Be First to Comment