சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்ப நிலையத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா அறிவித்துள்ளார்.
இதன்போது வாகன பின்னிலக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை 1 ஆம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 288 முதல் ஜே/ 320 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 321 தொடக்கம் ஜே/ 347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.
எரிபொருளைப்
பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவிடயந் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா, பொதுமக்களின் நேர விரயம், சிரமம், அலைச்சல் ஆகியவற்றைத் தவிர்க்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய இந்த முயற்சிக்கு பொது மக்களுடைய பூரண ஒத்துழைப்பு அவசியம். பொது மக்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படும் – என்றார்.
Be First to Comment