தெளிவில்லாது மக்களை கஜேந்திரன் குழப்புகின்றார்: இரா.சாணக்கியன் (Photo)
1 மணி நேரம் முன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அத்துடன் பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல்கள் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் தற்போது அரசியல் ரீதியான குழப்பங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மக்களை குழப்புதல்
இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்விற்கான பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்பி வருகின்றார்.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அகற்றுவதற்கு முயல்வதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை தெரிவிக்கின்றார்.
அவருக்கு வழியும் தெரியாது இலக்கும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன.
சமூக ஊடகங்கள்
இதனை கூறினால் சமூக ஊடகங்களில் என்னை தாக்குகின்ற குழுக்கள் தயாராகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment