மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அதேவேளை தீர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வாரம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தலா 6,600 லீற்றர் கொண்ட 32 பெள சர்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
10,000 மெட்ரிக் தொன் எரிபொருளைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ரஷ்யாவிடம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய்யை குறைந்த விலையில் பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
Be First to Comment